ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு - ஆதார் எண்ணை ரேசன் காட்டுடன் இணைக்க ஜூன் 30 கடைசி நாள்
ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி நாள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30 2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சுமார் 80 கோடி பயனாளர்கள் உள்ளனர்.
ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைப்பதால் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய முடியும். புலம்பெயர் தொழிலாளர்கள் தடையின்றி உணவு தானியங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும்.
இதன் மூலம், நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடையிலும் ரேஷன் பெற முடியும். முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது.
தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ளது. நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், வரும் ஜூன் 30 2022க்குள் அதை செய்து முடிக்கவும்.
தேவையான ஆவணங்கள்: ஒரிஜினல் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ். ஆன்லைனில் இந்த ஆவணங்களை கொண்டு ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கலாம்.
இதற்கு முதலில் https://uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ' start now' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதில், முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும்.
பின்பு 'ration card benefit' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.OTP ஐ நிரப்பினால் ஆதார் - ரேஷன் கார்டு இணைக்கப்பட்டுவிடும்.
No comments:
Post a Comment