ஏப்ரல் 4 வரை மீண்டும் முழு ஊரடங்கு - அரசு அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 2, 2022

ஏப்ரல் 4 வரை மீண்டும் முழு ஊரடங்கு - அரசு அதிரடி உத்தரவு!

ஏப்ரல் 4 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்டை நாடான இலங்கை நாட்டில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் இலங்கையில், கொரோனா தொற்று காரணமாக பிறக்கப்பிட்ட முழு ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாகவே இலங்கையில் பொருளதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் - டீசல், அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் அந்நாட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர்.

ஒரு கப் டீ விலை சுமார் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சூழ்நிலை அங்கு ஏற்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டின் மீது பொது மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து பொது மக்களின் போராட்டம் காரணமாக நாடு முழுதும் அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் இன்று, இலங்கை முழுவதும் மாலை 6 மணி முதல், நாளை மறுநாள் காலை அதாவது வரும் 4 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை இலங்கை அரசு அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad