குடும்ப உறுப்பினர் கொரோனா மரணத்திற்கு நிவாரணம் கோருவோர் மே 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தருமபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோருவோா் வரும் மே 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
"கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு நிவாரண தொகை வழங்குவதற்கு இணையம் வழியாக மனுக்கள் பெறப்பட்டு, மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 1,243 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 1,040 மனுக்களுக்கு ரூ.50,000 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 126 மனுக்கள், இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.
அரிதான நோய்களின் சிகிச்சைக்கு நிதி: நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த தருமபுரி எம்.பி!
இந்தநிலையில், உச்சநீதிமன்றம் தற்போது மாா்ச் 20-ஆம் தேதிக்கு முன்னா் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் விண்ணப்பங்களை மே 18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனவும், அந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட நிா்வாகம் 30 தினங்களுக்குள் தீா்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
உரிய காலத்துக்குள் நிவாரணம் கோரி மனு சமா்ப்பிக்க இயலாதவா்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீா்வு செய்யும்.
எனவே, கொரோனா தொற்று காரணமாக இறந்தவா்களின் குடும்பத்தினா், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment