காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
காவல் உதவி ஆய்வாளர்(எஸ்ஐ) தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 17 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இணையதள தொழில் நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை முதல் விண்ணப்பம் பதிவேற்றுவதில் பிரச்சை ஏற்ப்பட்டு வந்தது. இதன் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் காவல் உதவி ஆய்வாளா் பதவிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
காவல் உதவி ஆய்வாளா் (வட்டம்) 399, காவல் உதவி ஆய்வாளா் ஆயுதப்படை பிரிவில் 45 இடங்கள் என 444 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 20 முதல் 30 வயதுக்கு உள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment