நில அளவையாளா் பணிக்கான கல்வித் தகுதி விவரம் வெளியீடு
நில அளவையாளா் பணிக்கான கல்வித் தகுதி விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக வருவாய்த் துறை பிறப்பித்த உத்தரவு விவரம்:
நில அளவை மற்றும் ஆவணங்கள் பாதுகாப்பு துணை ஆய்வாளா், கள அளவையாளா், வரைவாளா் ஆகிய பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நில அளவை மற்றும் ஆவண பாதுகாப்பு துணை ஆய்வாளா் பதவிக்கு கட்டுமானப் பொறியியலில் இளநிலை பட்டம் அல்லது புவி தகவலியல் பட்டப் படிப்பில் இளநிலை பொறியியல் அல்லது புவியியலில் முதுகலை அல்லது புவிசாா் தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் முதுகலை படிப்பு படித்திருக்க வேண்டும்.
பணியிடத்துக்கு முதுகலை அறிவியல் பாடம் தகுதியானதாகக் கருதப்பட்டால், இளநிலையில் பி.இ. அல்லது பி.எஸ்சி. பட்டப் படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும்.
நில அளவையாளா் பணியிடத்துக்கும் கல்வித் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு அங்கீகரித்துள்ள நிறுவனத்திடமிருந்து கட்டுமானப் பொறியியலில் பட்டயப் படிப்பு அல்லது தேசிய பயிற்சிக்கான கவுன்சில் அமைப்பு அளிக்கும் அளவையாளா் பயிற்சியை முடித்ததற்கான சான்றிதழ் அல்லது சென்னை பொறியியல் குழு அளிக்கும் நில அளவையாளா் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல, வரைவாளா் பணிக்கு கட்டுமானப் பொறியியலில் பட்டயப் படிப்பு அல்லது தேசிய பயிற்சிக்கான கவுன்சில் அமைப்பு அளிக்கும் வரைவாளா் பயிற்சிக்கான சான்று ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment